உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

பாரிய போராட்டமொன்றை யாழில் நடாத்த தீர்மானம்

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்வரும் 14 ஆம்; பாரிய போராட்டமொன்றை யாழில் நடாத்த உள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து ஏனைய மாவட்டங்களில் நடைபெறுவது போன்று தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று யாழ் சங்கிலியன் பூங்காவில் நேற்று மாலை நடைபெற்றது.

இதன் போது பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டள்ளதுடன் புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது.

இக் கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது..

குhணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு கிழக்கில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அத்தோடு அரசின் காணாலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந் நிலையில் யாழில் இன்று ஒன்று கூடிய காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இதே போன்று யாழிலும் தொடர் போராட்டத்தை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளனர்.

அதாவது காணாமலாக்கப்பட்டவர்களுக்காக யாழில் ஒரு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறொம். அந்த அலுவலகம் எங்களுக்குத் தேவையில்லை.

இந்த அலுவலகத்தை அகற்றுமாறு கோரி எதிர்வரும் 14 யாழில் பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளோம்.

அதனைத் தொடர்ந்து ஏனைய மாவட்டங்களில் கொட்டகை அமைத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போராட்டங்கள் போன்று யாழிலும் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்.

ஏனெனில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தை அரசாங்கமோ எங்கள் பிரதிநிதிகளோ கண்டு கொள்வதில்லை. ஆனால் அதனால் அவர்கள் தேர்தல்களில் வீழ்ச்சிகளையே எதிர்நோக்கி வருகின்றனர்.

ஆனாலும் உறவுகள் தொடர்ச்சியாக போராடி வருகின்றது போன்று நாங்களும் இங்கு போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.

ஏங்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இப்போது தேர்தல் காலம் என்பதால் தேர்தல் திருவிழாக்களில் உள்ளனர். அவர்கள் எமது பிரச்சனையில் அக்கறை கொள்வதில்லை.

எங்களைப் பற்றிக் கிஞ்சித்தும் பார்க்கின்றனர் இல்லை. தங்கள் நலன்களை முன்னிலைப்படுத்தியே அவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.

புhதிக்கப்பட்ட மக்கள் நாம் தான் எமக்காக போராடி வருகின்றோம். அதனடிப்படையில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்திருக்கின்றோம்.

அரசியல் வாதிகள் எமது போராட்டத்தைக் கண்டு கொள்ளாது விட்டாலும் பொது மக்கள் எமக்கு ஆதரவை வழங்கி வருகின்றனர். அரசியல்வாதிகளின் சுய நல செயற்பாடுகளை இன்றைக்கு சகலரும் அறிந்து கொண்டள்ளனர்.

மேலும் காணாமல் போனவர்களுக்கான அலுவலகமொன்று யாழில் தற்பொது திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது. உண்மையில் காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் எங்களுக்குத் தேவையில்லை.ஏனெனில் எங்கள் உறவுகள் காமலாக்கப்பட்டிருக்கின்றனர்.

ஆகவே அந்த அலுவலகம் இங்கு தேவையில்லை. அதை தெற்கிற்கே கொண்டு செல்ல வேண்டும. இத்தகைய கோரிக்கைகளை முன்வைத்தே தொடர்ச்சியான போராட்டதை முன்னெடுக்க உள்ள்ளதாக கூறினர்.

கருத்து தெரிவிக்க