உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின்போது கொல்லப்பட்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை, 44ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையின் வெளியுறவு அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஒரு பங்களாதேஸ் நாட்டவர், 6 சீனர்கள், 11 இந்தியர்கள், 3 டென்மார்க் நாட்டவர்கள், ஒரு ஜப்பானியர், ஒரு நெதர்லாந்து நாட்டவர், ஒரு போர்த்துக்கல் நாட்டவர், 2 சவூதி அராபியர்கள், ஒரு ஸ்பெய்ன் நாட்டவர், ஒரு சுவிட்ஸர்லாந்து நாட்டவர், 2துருக்கியர்கள், 6 பிரித்தானியர்கள், ஒரு அமரிக்கர், 2 அமரிக்க, பிரித்தானிய குடியுரிமையைக்கொண்டவர்கள், ஒரு சுவிஸ் மற்றும் நெதர்லாந்து குடியுரிமையை கொண்டவர்,2 அவுஸ்திரேலியா- இலங்கை குடியுரிமைகளை பெற்றவர்களே, தாக்குதல் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களாவர்.
இதில் 31பேரின் சடலங்கள் ஏற்கனவே அடையாளம் கண்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
கருத்து தெரிவிக்க