கொழும்பு குண்டுத் தாக்குதலை அடுத்து, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் பாதிப்புக்கள் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளோபல் டைம்ஸ் இணையத்தளம் இந்த செய்தியை, பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவரை கோடிட்டு வெளியிட்டுள்ளது.
கொழும்பில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களின்போது சௌத் சைனா ஆய்வக நிறுவனத்தில் பணியாற்றும் நான்கு விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டனர்.
இவர்கள், கிங்ஸ்பெரி விருந்தகத்தில் இடம்பெற்ற தாக்குதலின்போது கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தை அடுத்து இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
எனினும் அதனை சீனாவின் பாதுகாப்பு ஆய்வாளர் மறுத்துள்ளார்.
பயங்கரவாதத்தை ஒழிக்கும் செயற்திட்டத்தில் சீனாவும் இணைந்துக்கொள்ளும்.
இந்தநிலையில் சீனா தமது புலனாய்வு உத்திகளை இலங்கையுடன் பகிர்ந்துக்கொள்ளவேண்டும் என்றும் அந்த ஆய்வாளர் கோரியுள்ளார்.
கருத்து தெரிவிக்க