- இலட்சியத்தை நம்மால் பின்பற்ற முடியவில்லை என்றால், நமது பலவீனத்தை நாம் ஒப்புக் கொள்வோம்.
- இலட்சியத்தை நாம் இழிவுபடுத்தாமல் இருக்க வேண்டும். லட்சியத்தைத் தாழ்ந்த நிலைமைக்குக் கொண்டு செல்ல வேண்டாம்.
- உன் நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதைக் குறித்து நீ கவலைப்பட வேண்டாம். இலட்சியத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு முன்னேறியபடியே இரு!
- என்னுடைய இலட்சியத்தை, உண்மையில் சில சொற்களில் சொல்லி முடித்துவிடலாம். அதாவது, மக்களுக்கு அவர்களுடைய தெய்வீகத் தன்மையை எடுத்துச் சொல்வதும், வாழ்க்கையின் ஒவ்வோர் இயக்கத்திலும் அதை எப்படி வெளிப்படுத்துவது என்பதை எடுத்துச் சொல்வது தான் அது.
கருத்து தெரிவிக்க