ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை பெயரிடுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பச்சைக்கொடி காட்டியுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
இதன்படி சஜித்தின் பெயரை வாரஇறுதியில் பிரதமர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் மேற்படி வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமிடையிலான சந்திப்பு நேற்றிரவு அலரிமாளிகையில் நடைபெற்றது. இதன்போது முக்கிய அமைச்சர்களும் பங்கேற்றிருந்தனர்.
ஜனாதிபதி வேட்பாளர், புதிய அரசியல் கூட்டணி குறித்தே கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்போதே சில நிபந்தனைகளுடன் விட்டுக்கொடுப்புகளை செய்ய ரணில் இணங்கியுள்ளார் என கூறப்படுகின்றது.
அத்துடன், ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தை கையாள்வதற்காக குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, கபீர் ஹசீம், மங்கள சமரவீர, ரஞ்சித் மத்துமபண்டார, ராஜித்த சேனாரத்ன ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
கருத்து தெரிவிக்க