உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘மகாவலி கங்கையில் மண் அணை’

திருகோணமலை கந்தளாய் பிரதேச சபைக்கு உட்பட்ட சூரியபுர பிரதேசத்தில் பாயும் மகாவலி ஆற்றுக்குள் ஒரு பகுதியில் மண்அனையொன்றை நேற்று இராணுவமும்
திருகோணமலை நீர் வழங்கள் தினைக்கள அதிகாரிகளும் இணைந்து அமைத்தனர்.

குறைந்து கொண்டு செல்லும் கந்தளாய் குளத்தின் நிலமையை தொடர்ந்தே திருகோணமலை மாவட்ட குடிநீர் பாவனையாளர்களின் குடிநீர்த்தேவையை நிவர்த்தி செய்யும் பொருட்டே இவ் அனை அமைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட குடிநீர் தட்டுப்பாட்டை தொடர்ந்து மகாவலி கங்கையில் நீர்வரத்து குறைந்ததை அடுத்து மகாவலி கங்கையில் இருந்து குடிநீருக்கு நீர் பெற்றுக்கொள்ளும் சூரியபுர பிரதேசத்தில் நீரின் மட்டத்தை அதிகரிக்கும் பொருட்டே
மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க