மத்திய மாகாணசபைத் தேர்தலின்போது முதலமைச்சர் வேட்பாளராக முத்தையா முரளிதரனை களமிறக்குவதற்கு மஹிந்த தரப்பு உத்தேசித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என முத்தையா முரளிதரன் அறிவித்து வந்தாலும், தற்போது ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய ஆரம்பித்துள்ளார்.
இதன்ஓர் அங்கமாகவே கோட்டாவுக்கு ஆதரவு வழங்கும் வகையில் ‘எளிய’ அமைப்பின் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றியிருந்தார்.
அத்துடன், முரளிதரனுக்கு முக்கிய பதவி வழங்கப்படும் என கோட்டா தரப்பிலிருந்து உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெறும் பட்சத்தில் ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக மாகாண ஆளுநர்கள் பதவிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
இதன்போது முரளிக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டு, மாகாணசபைத் தேர்தல் நடைபெறும்போது முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்படவுள்ளார். இதன்பின்னிணியில் முக்கிய தேரர் ஒருவரும் செயற்பட்டு வருகிறார்.
கருத்து தெரிவிக்க