உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

தமிழ் இலக்கிய விழாவில் பாடலாக்கப் போட்டியில் விருதும் கெளவிப்பும்

கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2019 ஆம் ஆண்க்கான கிழக்கு மாகாணத் தமிழ் இலக்கிய விழாவில் கௌரவிக்கப்படும் பல்துறை கலைஞர்கள்
இலக்கியவாதிகளின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அரசாங்க ஊழியர்களுக்கிடையிலான படைப்பாக்கப் போட்டியில் சிறந்த நூல்களுக்கான பரிசு, வித்தகர் விருது, முதலானவற்றில் தெரிவானவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி வளர்மதி ரவீந்திரன் தெரிவித்தார்.

இதில் பெரிய கிண்ணியாவைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஆசிரியர் ஆலோசகரும் கிண்ணியா கலை இலக்கிய மன்றத்தின் தலைவரும் ,அகில இலங்கை சமாதான நீதிவானுமாகிய ஹயாத்து முஹம்மது ஹலால்தீன் (உலா வரும் கலா) என்பவருக்கு அரசாங்க ஊழியர்களுக்கிடையில் நடத்தப்பட்ட பாடலாக்கப் போட்டியில்
வெற்றி பெற்றுள்ளதனால் விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளார்.

இலக்கியத் துறையில் சுமார் 46 வருடங்களும், ஊடகத்துறையில் 21 வருடங்களும் ஆசிரியர் தொழிலில் 23 வருடங்களும் அனுபவம் வாய்ந்தவர்.

தமிழ் மொழியில் விசேட துறைக்கான பட்டத்தையும் தமிழில் முதுகலை மாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

பல் துறை ஈடுபாடு கொண்ட இவர் 2013 ஆம் ஆண்டு கலாசாரத்திணைக்களத்தினால் நடத்தப்பட்ட சிறுவர் இலக்கியப் போட்டியில் முதலிடம் பெற்று தேசிய விருதையும் 2018
ஆம் ஆண்டு கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட சிறுவர் படைப்பாக்கப் போட்டியில் தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

கருத்து தெரிவிக்க