‘அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ எனும் திட்டம் கல்வி அமைச்சினால் தேசிய ரீதியாக நாடெங்கும் நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
குறித்த திட்டத்தின் ஊடாக தி/மூ/அந் நஹார் மகளிர் மகாவித்தியாலயத்தில் இரு பாடசாலைக் கட்டிடங்கள் கிடைக்கப்பெற்று, அதன் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்த நிலையில், குறித்த இரண்டு கட்டிடங்களும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களால் இன்று (09)திறந்து வைக்கப்பட்டு, பாவனைக்கு விடப்பட்டது.
கனிஷ்ட இடை நிலை ஆய்வு கூடம்,ஆரம்ப கற்றல் வள நிலையம் போன்ற கட்டிடங்களே
இவ்வாறு திறந்து வைக்கப்பட்டது
இதில் மூதூர் வலயக் கல்வி பணிப்பாளர் ஹாசீம்,மூதூர் பிரதேச சபை உறுப்பினர் அகீதா
நஸார், கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட், பிரதியமைச்சரின்
இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ், வட்டார வேட்பாளர் சியான் உள்ளிட்ட பாடசாலை அதிபர்
ஆசிரியர்கள்,பெற்றார்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
கருத்து தெரிவிக்க