விடுதலைப்புலிகள் 2019ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டதும் போர் முடிவுக்கு வந்த நாளையே தாம் முக்கியமான நாளாக கருதுவதாக இலங்கையின் கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகளின்போது சமாதானத்துக்கான வர வாய்ப்புக்கள் இருந்தபோதும் அதனை விடுத்து அவர்கள் அப்பாவி பொதுமக்களை கொலை செய்தார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவான நிகழ்வு ஒன்று இன்று இடம்பெற்றபோது முரளிதரனும் அதில் பங்கேற்றார்.
இதன்போது கருத்துரைத்த அவர் எதிர்கால ஜனாதிபதி உண்மையான அனுபவமிக்க அரசியல்வாதியாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.
உண்மையான தலைவர் வார்த்தைகளில் அல்லாமல் உதாரணமாக விளங்கவேண்டும்.
மக்களுக்காக உயிரை தியாகம் செய்யப்போவதாக சிலர் கூறுகின்றனர்.
இதனால் பயன் எதுவும் இல்லை.
இந்தநிலையில் இலங்கைக்கு சேவை செய்துள்ளவருக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களிக்கவேண்டும் என்றும் முரளிதரன் கோரிக்கை விடுத்தார்.
கருத்து தெரிவிக்க