கல்விக்காக ஆகக்கூடுதலான நிதியை சமகால அரசாங்கம் முதலீடு செய்துள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
19 கல்வியியல் கல்லூரிகளில் 31 கல்வி கற்கை நெறிகளின் கீழ் பயிற்சிகளைப் பெற்ற 4,300 பேருக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நிகழ்விலேவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வு இன்று அலரிமாளிகையில் இடம்பெற்றது.
ஆசிரியர் பயிற்சி உள்ளிட்ட ஆசிரியர்களின் கல்விக்காக பாரிய தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம், விஞ்ஞான ஆசிரியர்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
தொழில்நுட்ப கல்வியியல் கல்லூரி பீடமொன்று அண்மையில் குருநாகலில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறான கல்லூரிகளை நாடு முழுவதிலும் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
நாட்டின் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கியுள்ளது. இதற்காக ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சியும் வழங்கப்பட வேண்டுமென்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
2015-2017 கல்வி ஆண்டுகளில் 3 வருட கல்வியியல் கல்லூரி டிப்ளோமா பட்டநெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.
கருத்து தெரிவிக்க