உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

சீசெல்ஸில் பிடிபட்ட இலங்கையரை நாடு கடத்த உத்தரவு

சீசெல்ஸ் கடலில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறப்படும் இலங்கையரை நாடு கடத்துமாறு அந்த நாட்டின் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி கொஸ்டாவத்த தமீல் என்ற இலங்கையர் சீசெல்ஸ் கடலில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி கைதுசெய்யப்பட்டார்.

இந்தநிலையில் தடுத்து வைக்கப்பட்ட அவரை தண்டப்பணமாக 146 டொலர்களை செலுத்துமாறும் சீசெல்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த 146 டொலரை குறித்த இலங்கையர் அவர் மீன்பிடிக்காக பயன்படுத்திய படகை விற்பனை செய்வதன் மூலம் செலுத்தவேண்டும் என்றும் நீதியரசர் ரொனி கோவிந்தன் உத்தரவிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க