உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

நடைபாதையில் கழிவு நீர்; சுகாதார சீர்கேடு நிலவுவதாக மக்கள் குற்றச்சாட்டு!

மஸ்கெலிய நகரில் உள்ள 14 ம் இலக்க வீதியில் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் நடைபாதையில் வழிந்தோடுவதனால் சுகாதார சீர்கேடு நிலவுவதாக மக்கள் சுட்டிகாட்டுகின்றனர் .

குறித்த பாதையானது பிரதான பாதையில் இருந்து .75 கி .மீ நீளமான இந்த பாதை கடந்த 2017 ம் ஆண்டு கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் 1500 ,000/= மில்லியன் ரூபாய் செலவில் கொங்கிரீட் போடப்பட்டு சுமார் நூறு அடிகள் வரை மாத்திரமே வடிகான் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வடிகான் அமைக்கப்படாத காரணத்தால் கழிவுநீர் நடைபாதையில் வழிந்தோடுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறித்த பாதையை கடந்தே மஸ்கெலிய வைத்தியசாலைக்கு கூடுதலான மக்கள் தினமும் செல்ல வேண்டியுள்ளது.

மேலும் ஏராளமான குடியிருப்புகளும் இப்பகுதியில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த பாதையில் மழைக்காலங்களில் கழிவுநீர் பெருக்கெடுத்தது ஓடுவதால் குறித்த பாதையில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த 14 ம் இலக்க வீதிக்கும் சுகாதார பரிசோதகர் காரியாலயத்திற்கும் சுமார் இருநூறு மீற்றர் தூரமே உள்ளது.

தினமும் அவ்வழியாக செல்லும் சுகாதார அதிகாரிகளுக்கு இந்த பாதையின் நிலை தெரியவில்லையா? என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் .

இந்த பாதைக்கு முறையான வடிகான் அமைத்து கழிவுநீரிலிருந்து இப்பகுதி மக்களை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வரவேண்டும்.

கருத்து தெரிவிக்க