உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

சவேந்திர சில்வா தொடர்பில் விசாரணைகள் அவசியம்- இந்திய தளபதி

இலங்கையின் புதிய அரசாங்கம் சுமத்தப்படும் போர்க்குற்றம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்.
உள்ளுர் மய விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்.

அத்துடன் நல்லிணக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்று இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிப்படையின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் அசோக் மேஹ்டா கோரியுள்ளார்.

உள்ளுர் விசாரணகளையா? அல்லது வெளிநாட்டு விசாரணைகளையா? மேற்கொள்வது என்பது தொடர்பில் அரசாங்கம் தீர்மானிக்கவேண்டும்.

அதேவேளை அதற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஏற்றுக்கொண்ட கொள்கைகளை அது நடைமுறைப்படுத்தவேண்டும்.

தமிழர்களுடைய பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும். அதன் பின்னர் தமிழர்களை வெல்லக்கூடிய வகையில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

காணாமல் போனோர் அலுவலகம் திறக்கப்பட்டமை வரவேற்கத்தக்கது

எனினும் அதன் செயற்பாடுகள் தொடரவில்லை. இந்தநிலையில் அரசாங்கம் 2015ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள்; பரிந்துரைகள் தொடர்பில் செயற்படவேண்டும்.

எனினும் அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறவில்லை.

புதிய இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உட்பட்ட போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள அனைவர் தொடர்பிலும் புதிய அரசாங்கம் விசாரணைகளை நடத்தவேண்டும்.

இந்தநிலையில் இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போரின்போது 12 ஆயிரம் இந்திய வீரர்கள் மரணமாகி 5000 பேருக்கு காயங்கள் ஏற்பட்டன.

இந்த அர்ப்பணிப்பு இலங்கையின் இறைமையை பாதுகாப்பதற்காக என்பதை அனைவரும் ஏற்கவேண்டும் என்று மேஹ்டா தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க