கௌரவ. பாராளுமன்ற உறுப்பினறும்,, கல்வி அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினரும்,
மூதூர் பிரதேச அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான இம்ரான் மகரூப் அவர்களின்
முழு முயற்சியின் பயனாக டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சினால் உருவாக்கப்பட்ட
கணணி நிலயம் கிளிவெட்டி தமிழ் வித்தியாலயத்தில் வெகுவிமர்சயாக திறந்து
வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.இம்றான் மகரூப், கிண்ணியா
நகரபிதா நளீம், மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்,
மாணவர்கள், பெற்றோர்கள், வட்டார வேட்பாளர் கேதீஸ் உட்படபலரும் கலந்துகொண்டு
சிறப்பித்தனர்
இங்கு தலா 10 கணணிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க