உலகளாவிய ரீதியில் கறுவா ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காமிடத்தில் உள்ளதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை கறுவாவுக்கு சர்வதேச சந்தையில் அதிக கேள்வி நிலவுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஆரோக்கியமான முறையில் கறுவா உற்பத்தியை மேலும் விஸ்தரிப்பதற்காக விவசாயிகளை இணைத்துக் கொள்ளவுள்ளதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க