மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் நிதி உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமரிக்க வர்த்தக சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
480 பில்லியன் டொலர்கள் நிதி இந்த உடன்படிக்கையின் கீழ் கிடைக்கவுள்ளது. எனினும், இலங்கையின் ஜனாதிபதி இதற்கான அனுமதியை வழங்க மறுத்துவருகிறார்.
இந்தநிலையில் ஹவாட் பல்கலைக்கழக ஆய்வின்படி இலங்கையின் போக்குவரத்து கட்டமைப்பு செயலற்று உள்ளது.
இதனை மையமாக வைத்து இலங்கை அரசாங்கம் பரிந்துரை செய்த திட்டங்களுக்காகவே இந்த நிதி வழங்கப்படவுள்ளது.
குறித்த நிதியின்மூலம் போக்குவரத்து கட்டமைப்பு அபிவிருத்தி செய்யப்பட்டால், 11.3 மில்லியன் மக்கள் அதாவது இலங்கை மக்களில் 54 வீதத்தினர் நன்மைப்பெறுவர் என்று அமரிக்க வர்த்தக சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்து தெரிவிக்க