புதிதாக ஆளுநர் பதவி ஏற்றுள்ள தமிழிசை சௌந்தரராஜன் தமது தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக செயற்பட்டு வந்த தமிழிசை சௌந்தரராஜன் இன்று (ஞாயிற்றுக்கிழமையன்று) நியமிக்கப்பட்டார்.
இந்நிலையிலேயே அவர் முன்பு வகித்த பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அவரது பதவி விலகலை தொடர்ந்து குறித்த பதவிக்கு புதிதாக நியமிக்கப்படவுள்ளவர் தொடர்பில் பா.ஜ.க.வட்டாரங்களில் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகிறது.
கருத்து தெரிவிக்க