உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சமூகத்தில் வன்முறை பற்றிய கருத்துக்கணிப்பு இடம்பெறுகிறது- ரஷிகா

நாட்டில் அவ்வப்போது விசுவரூபமெடுத்து நிரந்தர சமாதானத்திற்குக் கேடாக அமைந்துள்ள சமூக வன்முறைகளின் தோற்றுவாய் பற்றிய கருத்துக் கணிப்புக்களை தேசிய சமாதானப் பேரவை நடாத்தி வருவதாக தேசிய சமாதானப் பேரவையின் திட்ட உதவி முகாமையாளர் ரஷிகா செனவிரெட்ன தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் சமூக வன்முறைகளின் தோற்றுவாய் பற்றிய கருத்துக் கணிப்பு மட்டக்களப்பிலும் இன்று (01.09.2019) இடம்பெற்றது.

இக்கருத்துக் கணிப்பில் ஆராயப்படும் விடயங்கள் தொடர்பாக மேலும் விவரங்களைத் தெரிவித்த அவர், கருத்துக் கணிப்புக்கு உட்படுத்தும் சகல சமூகங்களையும் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட சமாதான ஆர்வலர்களிடம் பல வினாக்கள் வினவப்படுகின்றன.

குறிப்பாக முதலாம் கட்டக் கணிப்பில், பல வினாக்கள் தொடுக்கப்படுகின்றன.

அவற்றில், வன்முறை என்றால் நீங்கள் கருதும் அர்த்தம் யாது? அது உடல் வன்முறை உளம் சார்ந்ததா? வெறுப்புக் கலந்ததா?

சித்தாந்தம், மத அல்லது அரசியல் இலக்குகறை அறடய வன்முறையைப் பயன்படுத்துவது சரியா?

சித்தாந்தம், மதம் அல்லது அரசியல் குறிக்கோள்களுடன் தொடர்புடைய வன்முறைகளை நீங்கள் கண்டிருக்கிறீர்களா, கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

சித்தாந்தம், மத அல்லது அரசியல் காரணங்களுக்காக வன்முறையைப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கும் நபர்கள், குழுக்கள் அல்லது ஊடகங்களை நீங்கள் அறிந்திருந்தால் அவற்றை விவரிக்கவும்,

உங்கள் சொந்த சமூகங்கள், வகுப்புவாத வன்முறைகளில் பதற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய பிரச்சினைகளுக்கான காரணங்கள் யாவை?

சித்தாந்தம், மத ரீதியாக அல்லது அரசியல் ரீதியாக ஊக்கப்படுத்தப்பட்ட வன்முறையை எதிர்கொள்ள என்னென்ன வழிமுறைகள், செயல்முறைகளை, பொறிமுறைகளைப் பயன்படுத்தலாம்? என்பன உள்ளிட்ட கேள்விகளின் மூலம் கருத்துக்களைப் பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க