உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஸ்ரீ.ல.சு. கட்சியின் 68 ஆவது வருடாந்த மாநாடு நாளை மறுதினம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 68 ஆவது வருடாந்த மாநாடு நாளை மறுதினம் (03) பிற்பகல் 3.00 மணிக்கு கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு இடதுசாரிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண, உள்ளுராட்சி சபை என்பவற்றின் உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் ஆகியோர் இதில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கட்சியிலிருந்து விலகிச் சென்று, ஒழுக்காற்று விசாரணை முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளவர்கள் இதில் கலந்துகொள்வார்களா? என்ற விடயம் நாட்டு அரசியலில் முக்கிய விடயமாக நோக்கப்படுகின்றது.

அத்துடன், இக்கட்சியின் கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் பொதுஜன பெரமுனவுடன் உள்ள பேச்சுவார்த்தையின் தீர்மானங்கள் என்பன குறித்து அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் காணப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க