மகளிருக்கான, உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளில் நடைபெறவுள்ள இடங்களில் இருந்து கொச்சியும் கோவாவும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
17வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான இந்தப்போட்டிகள், ஏற்கனவே 2017ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்றபோது, ஒரு போட்டியை சராசரியாக 25 ஆயிரம் பேர் ரசித்தனர்.
இதில் கோவாவில் 94ஆயிரம் பேரும், கொச்சியில் 120ஆயிரம் பேரும் அடங்கியிருந்தனர்.
இந்தநிலையில், 2020 மகளிருக்கான உலகக்கிண்ண போட்டி இடம்பெறும் இடங்களை பொறுத்தவரையில், டில்லி, மும்பாய், கொல்கத்தா என்ற வரிசையில் அதிக ரசிகர்களைக் கொண்ட கொச்சியும் கோவாவும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
இந்த தொடரில் 15 அணிகள் பங்கேற்கவுள்ளன.
கருத்து தெரிவிக்க