உள்நாட்டு செய்திகள்புதியவை

குருநாகல் பகுதியில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு

குருநாகல்- மில்லவ பிரதான வீதியின் பள்ளியவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாஸ்பொத்த பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில், இரு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்தவர்கள் படுகாயங்களுடன் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.  இதன்போது சிகிச்சை பலனிற்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கருத்து தெரிவிக்க