உள்நாட்டு செய்திகள்

கம்பளை பாடசாலை வளாகத்தில் துப்பாக்கி ரவைகள்

கம்பளை பிரதேச மகளிர் கல்லூரியின் வளாகத்தில் இருந்து டி56 ரக துப்பாக்கிகளுக்கான மற்றும் கைத்துப்பாக்கிகளுக்கான ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நேற்று இவை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஒருவரே இது தொடர்பில் காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த பொதியை யாராவது பாடசாலை வளாகத்துக்குள் வீசியிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க