ஹொங்கொங்கின் பிரபல சமூக ஆர்வலர் ’ஜோஸ்வா வோங்’ கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது ஜனநாயக சார்பு குழு தெரிவித்துள்ளது.
எங்களது தலைவர் ’ஜோஸ்வா வோங்’ கைது செய்யப்பட்டுள்ளார், இது காலை 7.30 மணியளவில் நடந்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் அமைப்பின் உறுப்பினரான அகின்ஸ் சோவ்வும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் அவர்கள், கைது செய்யப்பட்டதை காவல்துறை உறுதிப்படுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது என ஜனநாயக அரசியலமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஹொங்கொங்கில் குற்றவியல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.
ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத போராட்டக்காரர்கள் மசோதாவை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் ஜனநாயக ஆதரவாளர்கள் இலட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்
இந்நிலையில் ஜோஸ்வா வோங் தொடர்ச்சியாக இந்த ஆர்ப்பாட்டத்தில் பக்கபலமாக செயற்பட்டு வந்த நிலையில் கைதாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜோஸ்வா வோங் மாணவர் குழுவின் செயலாளராகவும் மற்றும் 2014-இல் நடைபெற்ற மாபெரும் ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களின் தலைவர்களில் ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க