உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

நல்லூர் தேர்த்திருவிழாவில் பக்தர்களிடம் கொள்ளை: முறைப்பாடு பதிவு

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்த சுவாமி ஆலய தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்கள் 12 பேரிடம் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

“முறைப்பாடுகளின் அடிப்படையில் சுமார் 30 பவுண் தங்க நகைகள் இன்றைய தினம் திருடப்பட்டுள்ளன. அவற்றில் தாலிக்கொடி ஒன்றும் 11 சங்கிலிகளும் அடங்குகின்றன. ஆண்கள் மூவரும் தமது தங்கச் சங்கிலியைப் பறிகொடுத்ததாக முறையிட்டுள்ளனர்” என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆலயத்துக்கு வருகை தந்த பக்தர்களிடம் வெளிவீதியில் வைத்து இந்தத் திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளன.

நல்லூர் ஆலய வெளி வீதியில் 60 சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன் 600 பொலிஸாருக்கு மேல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். எனினும் திருடர்கள் தமது கைவரிசையைக் காண்பித்துள்ளனர்.

இதேவேளை, அலைபேசி உள்ளிட்ட உடமைகளும் திருடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க