உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கையுடன் நெருக்கமாக செயற்படமுடியும்- அமரிக்கா

பாதுகாப்பு விடயங்களில் இலங்கையுடன் நெருக்கமாக நின்று செயற்படமுடியும் என்று அமரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளும் இதில் அடங்கும் என்று அமரிக்க தூதுவர் எலைய்னா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
எனினும் இராணுவத்தளங்கள் எதனையும் இலங்கையில் அமைக்க அமரிக்காவுக்கு திட்டம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமரிக்க தூதரத்தினால் நடத்தப்பட்ட பேஸ்புக் பதிவிடல் நிகழ்வின்போதே இந்தக் கருத்துக்களை அவர் பதிவிட்டுள்ளார்.
பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடரும் என்ற காரணத்தினாலேயே தமது பிரஜைகளுக்கு பயண அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது மக்களை பாதுகாக்க வேண்டியது அமரிக்காவின் கடமை என்றும் எலைய்னா டெப்லிட்ஸ் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க