வடக்கில் படையினர் வசம் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அரச அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படாத வகையில் உள்ள காணிகளை விடுவித்து அது தொடர்பான அறிக்கையை வடக்கின் ஆளுநர் ஒக்டோபர் முதலாம் திகதி தமக்கு சமர்ப்பிக்கவேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் விடுவிக்கமுடியாத காணிகளுக்கான நட்டஈடுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தக்கூட்டத்தின்போது வடக்கில் 80.98 வீத அரச காணிகளும் 90.73வீத பொதுமக்களின் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டது.
கருத்து தெரிவிக்க