பொன்மொழிகள்

மற்றவரை நேசியுங்கள்! சத்குரு ஜக்கி வாசுதேவ்

  • ஒவ்வொருவரும் உங்களை நேசிக்க வேண்டுமென்றால், நீங்கள் முதலில் அனைவரையும் நேசிக்க வேண்டும்.
  • நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் உயிருடன் இருப்பதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள்!
  • Lஉங்களுடைய மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் நீங்கள் மட்டுமே பொறுப்பு என்பதை உணருங்கள்.
  • தினசரி மற்றவருக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு செயலைச் செய்யுங்கள்.
  • எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்கத் தயாராக இருங்கள்.
  • மற்றவர்களின் வாழ்க்கை நிலையை, உங்களுடனோ அல்லது உங்கள் வாழ்க்கைத் துணையுடனோ ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அவர்களுடைய வாழ்க்கைப் பயணம் பற்றி நமக்கு எதுவும் தெரியாது.

 

கருத்து தெரிவிக்க