உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின போராட்டத்துக்கு விக்னேஸ்வரன் அழைப்பு

வடக்கு கிழக்கின் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கங்கள் ஒன்றிணைந்து காணாமல் போனவர்களின் சர்வதேச தினமான ஆகஸ்ட் 30 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஓமந்தை மற்றும் கல்முனை ஆகிய இடங்களில் இடம்பெறவுள்ளது.

இதில்  சகல பொது மக்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

ஓமந்தை போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இவ்வாறு தெரிவித்திருக்கும் விக்னேஸ்வரன் தனது கட்சி உறுப்பினர்கள் ஓமந்தைப் போராட்டத்தில் கலந்துகொள்ளவிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

காணாமல் போனவர்களின் சர்வதேச தினம் ஆகஸ்ட் 30 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.

பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளில் காணாமல் போய் அவர்களின் கதி என்னவென்று அவர்களின் உறவினர்களோ அல்லது சட்டப் பிரதிநிதிகளோ தெரியாமல் இருப்பவர்கள் தொடர்பில் சர்வதேச ரீதியாக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கம்.

இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்க படைகளினால் ஏராளமான தமிழ் மக்கள் சரண் அடைந்த முன்னாள் போராளிகள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

2009 ஆண்டு இறுதி யுத்தம் நடைபெற்ற போது பள்ளிக்கூடங்கள் வைத்தியசாலைகள் போன்ற பல்வேறுஇலக்குகளுக்குக் குண்டடித்து இராசயனப் போர்க்கருவிகள் பாவித்து இறந்தவர்கள் போக திட்டமிட்ட முறையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமல் ஆக்கப்பட்டனர்.

ஆனால் அரசபடைகளிடம் சரணடைந்த கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்று கூற அரசாங்கங்கள் முன் வராது இருக்கின்றன.

இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைமை என்னவென்று தெரியாமல் கடந்த 10 வருடங்களாக உறவுகளை இழந்தவர்கள் இராணுவ முகாம்களுக்கும்ரூபவ் பொலிஸ் நிலையங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் தடுப்பு முகாம்களுக்கும்ரூபவ் நீதிமன்றங்களுக்கும் அலைந்து திரிந்து எமது மக்கள் களைத்துப்போய்விட்டார்கள்.

ஐ.நா மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பிலான நடவடிக்கைகளை கண்துடைப்பு நடவடிக்கைகளாகவும் சர்வதேச சமூகத்தினை ஏமாற்றும் ஒரு நடவடிக்கையாகவுமே காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகங்களை வடக்கு கிழக்கில் அரசாங்கம் திறந்து வருகின்றது.

ஆகவேதான் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை எமது மக்களும் நானும் ஆரம்பம் முதலே எதிர்த்துவந்தோம்.

எனவே பொதுமக்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று விநயமுடன் வேண்டுகோள் விடுக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க