விளையாட்டு செய்திகள்

ஓய்வு அறிவித்தார் அஜந்த மெண்டிஸ்!

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸ் (34 ) அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

87 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மெண்டிஸ் 152 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன் 39 இருபதுக்கு – 20 போட்டிகளில் விளையாடி 66 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 70 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

கடந்த 2014 ஆம் அண்டு தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியே அஜந்த மெண்டிஸ் விளையாடிய இறுதி டெஸ்ட் போட்டியாகும்.

இதேவேளை, கடந்த 2008 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய மெண்டிஸ், இறுதியாக 2015 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார்.

கருத்து தெரிவிக்க