அமெரிக்க திறந்த வலைப்பந்து போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் ரோஜர் பெடரர், நோவக் ஜோகோவிச் ஆகியோர் வெற்றிபெற்றனர்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து ஜாம்பவான் ரோஜர் பெடரர், இந்திய இளம் வீரர் சுமித் நாகலை போராடி வீழ்த்தியுள்ளார்.
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க அமெரிக்க திறந்த வலைப்பந்து போட்டி நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இதில் தொடக்க நாளில் இடம்பெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், முதல் தர வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-4, 6-1, 6-4 என்ற நேர்செட்டில் ரோபர்டோ கார்பலெஸ்சை (ஸ்பெயின்) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), தரவரிசையில் 190-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் சுமித் நாகலை சந்தித்தார். தகுதிநிலை வீரரான சுமித் நாகல் முதல் செட்டை வசப்படுத்தி பெடரருக்கு அதிர்ச்சி அளித்தார்.
அதன் பின்னர் சரிவில் இருந்து மீண்ட பெடரர் அடுத்த 3 செட்களையும் தனதாக்கினார். 2 மணி 30 நிமிடங்கள் போராடிய பெடரர் 4-6, 6-1, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் சுமித் நாகலை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
இந்த வெற்றியின் மூலம் பெடரர் ‘முதல் தர-8’ வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் உலக வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
கருத்து தெரிவிக்க