துருக்கியின் பெத்துல்லா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 50 உறுப்பினர்கள் இலங்கை வந்ததாக துருக்கிய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துக்கு தகவல் தெரிவித்திருந்தது.
எனினும் அதனை அரசாங்கம் பொருட்படுத்தவில்லை என்று பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜிஎல் பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதியுடன் நேற்று முன்தினம் இடம்பெற்ற சந்திப்பின்போது இந்தக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அத்துடன் இலங்கை அரசாங்கத்துக்கு துருக்கி அரசாங்கம் விடுத்த எச்சரிக்கையின் பிரதியையும் ஜிஎல் பீரிஸ், ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தார்.
இந்த பெத்துல்லா தீவிரவாதிகளே, 2016ஆம் ஆண்டு துருக்கிய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது 250 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டனர் என்பது குறி;ப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க