சினிமா

தனுஷுடன் போட்டி போடவுள்ள யோகிபாபு!

தர்மபிரபு, கூர்கா படங்களுக்கு பிறகு யோகிபாபு கதாநாயகனாக நடித்து திரைக்கு வரும் படம் “ஜாம்பி”. இந்த படத்தில் அவருடன் யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஆகஸ்டு 30-ம் திகதி வெளியிட திட்டமிட்டிருந்தனர் படக்குழுவினர். ஆனால் அதே திகதியில் பிரபாஸின் “சாஹோ” திரைக்கு வருவதால், ஜாம்பி படத்தின் ரிலீஸ் திகதியை செப்டம்பர் 6-ம் திகதிக்கு மாற்றி விட்டனர். இந்த திகதியில் தான் தனுஷின் “என்னை நோக்கி பாயும் தோட்டாவும்” வெளியாகயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க