வெளிநாட்டு செய்திகள்

‘10 நாட்களில் எந்த உயிரிழப்பும் கிடையாது’ ஜம்மு காஷ்மீர் ஆளுநர்’

இணைய சேவை, தொலைபேசி சேவையை நிறுத்தியது பள்ளத்தாக்கு பகுதியில் உயிர்களை காப்பாற்றுகிறது. ’10 நாட்களில் எந்தஒரு உயிரிழப்பு சம்பவமும் பதிவாகவில்லை ’ என ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்தியபால் மாலிக் கூறியுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை ரத்து செய்தும், மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு கடந்த 5-ந்
திகதி அறிவித்தது. இதன் காரணமாக காஷ்மீர் மாநிலம் முழுவதும் அசாதாரண சூழ்நிலை நிலவியது.

தகவல் தொடர்பு, தொலை தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து காஷ்மீரில் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவித்து தகவல் தொடர்பு, தொலை தொடர்பு வசதிகள் மீண்டும் வழங்கபப்ட்டன

இந்நிலையிலேயே குறித்த சேவைகள் துண்டிக்கப்பட்ட போது பள்ளத்தாக்கு பகுதியில் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை. ’10 நாட்களில் எந்தஒரு உயிரிழப்பு சம்பவமும் கிடையாது’ என ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்தியபால் மாலிக் கூறியுள்ளார். தகவல்தொடர்பின்மை உயிரைக் காப்பாற்ற உதவினால், அதிலென்ன தீங்கு?

கடந்த காலத்தில் காஷ்மீரில் ஏதாவது ஒரு நெருக்கடியான நிலை நேரிட்டாலே சுமார் 50 பேர் முதல்வாரத்திலே உயிரிழக்கும் சம்பவம் நேரிட்டது.

இப்போது இந்திய அரசு மனித உயிர்களை இழக்க கூடாது என்ற அணுகுமுறையை கையில் எடுத்துள்ளது.

10 நாட்களுக்கு தொடர்பாடல் போன்கள் சேவை மட்டும் இல்லாமல் இருக்கட்டும், மாநிலத்தில் மிக விரைவில் இயல்புநிலையை உறுதி செய்வோம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க