குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) பணிப்பாளர் சனி அபேசேகராவை நீதிமன்றத்திற்கு வரவழைக்கக் கோரியதை கொழும்பு தலைமை நீதவான் நேற்று (ஆகஸ்ட் 23) நிராகரித்துள்ளார்.
மார்ச் 3, 2015 மற்றும் ஜூன் 18, 2015 ஆகிய திகதிகளில் வெளியிடப்பட்ட சில நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றத் தவறியதன் மூலம் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை மீறியதாகக் கூறி சிஐடி பணிப்பாளருக்கு எதிராக சட்டத்தரணி ஜாலிய சமரசிங்க நீதிமன்றத்தை நாடியிருந்தார்.
ஆயுதங்களை வைத்திருந்த 4 நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த குறித்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சிஐடி பணிப்பாளர் தனது ஆலோசனையை கோரியபோது சந்தேக நபர்களை கைது செய்ய சட்டமா அதிபர் அனுமதி வழங்கவில்லை என தலைமை நீதவான் லங்கா ஜெயரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து தெரிவிக்க