உள்நாட்டு செய்திகள்

‘புதிய சிந்தனைகளை உருவாக்கும் நாடாக கட்டியெழுப்ப வேண்டும்’

இலங்கை தற்போது நான்காயிரத்திற்கும் அதிகமான அமெரிக்க டொலர்களை தனிநபர் வருமானமாகக் கொண்ட நாடாக உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை புதிய சிந்தனைகளை உருவாக்கும் நாடாக இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஒருகொடவத்தயில் அமைக்கப்பட்ட கொரிய – இலங்கை தேசிய தொழில்பயிற்சி நிறுவனத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வின்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த நிறுவனம் கொரியாவின் எக்ஸிம் வங்கியினால் வழங்கப்பட்ட கடனுதவியினால் அமைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இதற்காக அரசாங்கம் 2,900 மில்லியன் ரூபாவினைச் செலவிட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க