உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

ஓமந்தையில் டெங்கு நுளம்பு கட்டுப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

வவுனியா ஓமந்தை கிராம அலுவலகர் பிரிவில் தற்போது பெய்துவரும் பருவ மழையை முன்னிட்டு டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் இனங்கண்டு அழிக்கும் நடவடிக்கை ஓமந்தை சுகாதாரப் பரிசோதகர் க.சிவரஞ்சன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா ஓமந்தை பொலிஸ் நிலையத்திலிருந்து அம்மாச்சி உணவகம் வரையான கண்டி பிரதான வீதி ஓரங்களில் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பொலித்தீன் பாவனைப் பொருட்கள், மதுபானப் போத்தல்கள், மதுபான ரின்கள் என்பன துப்பரவு செய்யப்பட்டு டெங்கு நுளம்பு பெருக்கெடுக்கும் இடங்கள் அழிக்கப்பட்டுள்ளது.
இன்று மேற்கொள்ளப்பட்டு இந்நடவடிக்கையில் ஓமந்தை கிராம அலுவலகர், சமுர்த்திப்பயனாளிகள், முச்சக்கரவண்டிச்சாரதிகள், கிராம அமைப்புக்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

கருத்து தெரிவிக்க