இறக்கும் தருவாயில் உள்ள ஓர் நபரின் மனநிலை மற்றும் உயிர் பிரிவதற்கு முன் கடைசியாக தோன்றும் எண்ணங்களைப் பற்றிய முக்கியத்துவத்தை மதங்கள் வலியுறுத்திக் கூறுகின்றன. எந்த நினைவோடு ஒருவன் சாகிறானோ, அதை அனுசரித்து அவன் மறுபிறவியுறுவான் என்பது உண்மையே. பகவத் கீதையின் எட்டாவது அத்தியாயத்திலும் அவ்வாறு கூறப்பட்டுள்ளது. எனினும், சாகப்போகும் அக்கணத்தில் காண விரும்பும் அம் மெய்ம்மை இக்கணமும் எக்கணமும் இருந்து கொண்டுதானே இருக்கிறது? இப்போதே அதை உணரலாமே! ஆகவே யாரும் இறுதிக்காலம் வரை காத்திராமல் அதற்கு வெகு முன்னதாகவே மனத்தைப் பக்குவப்படுத்தித் தயார் நிலையில் வைத்திருப்பதன் அவசியத்தை உணர வேண்டும். அவ்வாறில்லையெனில், மரணத்தறுவாயில் விரும்பத்தகாத எண்ணங்கள் மேலோங்கும். அவற்றை அடக்கிக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அவை பூதாகரிக்கும்.
கருத்து தெரிவிக்க