பொன்மொழிகள்

கோபத்தை கைவிடு! கௌதம புத்தர்

  • உண்மையே பேச வேண்டும். கோபத்தை தவிர்க்க வேண்டும். கைவசம் இருப்பது கொஞ்சமே ஆனாலும் இருப்பவர்களுக்கு ஈதல் வேண்டும். இவ்மூன்று செயல்களும் ஒருவனைத் தேவர்களிடம் அழைத்துச் செல்கின்றன.
  • கோபத்தை கைவிடு. செருக்கை கைவிடு.” உலகப் பற்றுக்கள்அனைத்தையும் ஒழி. எதையும் தனது என்று நினையாதவனுக்குத் துன்பங்கள் ஏற்படுவதில்லை.
  • தலைமயிர் நரைத்து விட்டதனால் மட்டும் ஒருவர் முதிர்ச்சியடைந்த பெரியவர் ஆக இயலாது. அவ்வாறு அவர் அடைந்த முதிர்ச்சி பயனற்ற முதுமையாகும். மனதால் முதிர்ச்சியடைய வேண்டும்.

கருத்து தெரிவிக்க