உள்நாட்டு செய்திகள்புதியவை

ஜனாதிபதி ஏன் தமது அதிகாரத்தை பயன்படுத்தவில்லை?பீரிஸ்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த முடியுமா என நீதிமன்ற ஆலோசனை கோரும் ஜனாதிபதி ஏன் கடந்த 2 வருட காலமாக இது தொடர்பில் தமது அதிகாரத்தை பயன்படுத்தவில்லை என பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்  கேள்வி எழுப்பியுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார்.

‘அரசியலமைப்பினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களில் 129வது அத்தியாயத்திற்கு அமைவாக பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை நடத்த முடியுமா என ஜனாதிபதி உயர்நீதிமன்றில் சட்ட ஆலோசனை கோரியுள்ளார்.

தற்போது மாகாண சபை தேர்தல் தொடர்பில் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தும் ஜனாதிபதி கடந்த இரண்டு வருட காலமாக மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போட்டுள்ளமைக்கு ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய தரப்பினர் பொறுப்பு கூற வேண்டும்.

மாகாண சபை தேர்தலை பழைய தேர்தல் முறையில் தற்போது நடத்துவது எவ்விதத்திலும் சாத்தியப்படாது.

இதற்கு ஜனாதிபதி தேர்தலின் ஊடாகவே நிரந்தர தீர்வு காண முடியும்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க