இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நியமித்தமையினால் தமிழ் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
23ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (திங்கட்கிழமை) நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது நியமனம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
“இறுதிக்கட்ட போரின்போது இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தமை தமிழ் மக்களை அவமரியாதைக்கு உட்படுத்தும் செயற்பாடாகும்.
இந்த நியமனத்தினால் தமிழர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து நாங்கள் அதிருப்தியை தெரிவிக்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க