உள்நாட்டு செய்திகள்கட்டுரைகள்முக்கிய செய்திகள்

யார் இந்த அநுர குமார திஸாநாயக்க?

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார்.

* முழு பெயர் – திஸாநாயக்க முதியன்சலாகே அநுரகுமார திஸாநாயக்க.

*பிறப்பு – 1968.11.24.

*பிறந்த ஊர் – கலேவெல – நான்கு வருடங்களுக்கு பிறகு கெக்கிராவையில் குடியேறினார்.

*ஆரம்ப கல்வி – தம்புத்தேகம காமினி வித்தியாலயம்.
உயர் கல்வி – தம்புத்தேகம மத்திய கல்லூரி.

குறித்த பாடசாலையிலிருந்து உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவான முதல் மாணவர் இவராவார்.

*1992 இல் களனி பல்கலைக்கழகத்துக்கு தெரிவான இவர் 1995 இல் பட்டதாரியானார்.

அரசியல் வாழ்க்கை……

*1997 இல் சோஸலிச இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

*1997 இல் ஜே.வி.பியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும், 1998 இல் ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.

*1998 இல் மத்திய மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டார்.

*2000 இல் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.

* 2004 இல் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார். கூட்டணி அரசாங்கத்தில் விவசார அமைச்சர் பதவியையும் வகித்தார்.

*2008 இல் ஜே.வி.பியின் நாடாளுமன்ற குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.

*2010 இல் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு….

*2014 ஜனவரி 2 ஆம் திகதி ஜே.வி.பியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அவர் பதவியேற்ற பின்னர் மாகாணசபைத் தேர்தலில் ஜே.வி.பியின் வாக்கு வங்கி அதிகரித்தது.

2015 நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். எதிர்க்கட்சி பிரதம கொறடாவாகவும் செயற்பட்டார்.

*2019 ஆகஸ்ட் 18 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பு.

ஆர். சனத்

கருத்து தெரிவிக்க