சுதந்திர கட்சியுடனான கூட்டணியானது கொள்கையுடன் பலப்பட வேண்டும் என்பதற்காகவே கூட்டணி விவகாரம் பொருமையுடன் கையாளப்படுகின்றது என என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ் தெரிவித்தார்.
பரந்துப்பட்ட கூட்டணிக்கான யாப்பு தொடர்பிலான தீர்மானத்தை மேற்கொள்ளும் கலந்துரையாடல் நாளைமறுதினம் இடம் பெற உள்ளது.இவ்வாரத்துக்குள் கூட்டணி தொடர்பில் உறுதியான தீர்வு எட்டப்படும்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடனான கூட்டணி தற்போது வெற்றிப் பெறும் தருவாயில் காணப்படுகின்றது. சுதந்திர கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு எமது தரப்பினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். எனினும் சுதந்திர கட்சிக்குள் இன்று சில தரப்பினர் சுநலத்தின் பொருட்டே செயற்படுகின்றார்கள்.
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை தோற்றுவித்து போன்று சுதந்திர கட்சி மீண்டும் அந்த தவறினை செய்யாது என்று எதிர்பார்க்கின்றோம்.
ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக பலமான அரசாங்கத்தை அமைப்பதே எமது பிரதான இலக்காகும் என தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க