சினிமா

முதல் படத்திலேயே விருது வாங்கிய ஜெயம் ரவி மகன் ஆரவ்!

சைமா விருது வழங்கும் விழாவில் டிக்டிக்டிக் படத்தில் நடித்த ஜெயம் ரவியின் மகன் ஆரவ், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதைப் பெற்றார். சைமா எனப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி கடந்த ஆண்டுகளில் வெளியான படங்களில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த படம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கி வருகிறது.

அந்த வகையில் கடந்த வருடம் வடசென்னை படத்தில் நடித்த தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். சிறந்த நடிகைக்கான விருது 96 படத்திற்காக த்ரிஷா பெற்றார். விமர்சன ரீதியாக சிறந்த நடிகருக்கான விருது அடங்கமறு படத்தில் நடித்த ஜெயம் ரவிக்கு வழங்கப்பட்டது. அதேபோல், டிக்டிக்டிக் படத்தில் நடித்ததற்காக ஜெயம் ரவியின் மகன் ஆரவ், சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஒரே மேடையில் அடுத்தடுத்து அப்பாவும், மகனும் விருது வாங்கிச் சென்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

 

 

கருத்து தெரிவிக்க