ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது. 1200 பேர் பங்கேற்ற இந்நிகழ்வில் இசைக் கச்சேரியும் நடைபெற்றது. இதன் போது மேடை அருகில் திடீரென குண்டு வெடித்தது. இதில் இளைஞர்கள் குழந்தைகள் உட்பட 20 கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் கடந்த பல வருடங்களாக தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அமெரிக்கா தலிபான்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள போதும் அவர்கள் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இம்மாதம் 7 ஆம் திகதி ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு படையினரை இலக்கு வைத்து மேற்கொண்ட தாக்குதலில் பெண்கள் குழந்தைகள், பொதுமக்கள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 145 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க