கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிட தகுதியானவரா? இல்லையா? என்பதனை வேட்பு மனு தாக்கலின்போது தேர்தல் ஆணையாளர் தீர்மானிக்கட்டும் என்று பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ஷவின் பெயர் அமெரிக்காவின் மார்ச் முதல் ஜூன் மாத காலப்பகுதிக்கான விலக்களிப்பு பட்டியலில் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் வின வியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.
குறித்த பட்டியலில் கோத்தபாயவின் பெயர் இருக்கின்றதா? இல்லையா என்பது குறித்து யாரும் கவலையடைவேண்டியதில்லை.
கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிட தகுதியானவரா? இல்லையா? என்பதனை வேட்பு மனு தாக்கலின்போது தேர்தல் ஆணையாளர் தீர்மானிக்கட்டும்.
விலக்களிப்பு பட்டியலில் கோத்தபாயவின் பெயர் இருக்கின்றதா? இல்லையா என கவலைப்படுகின்றவர்கள் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்துடன் தொடர்புகொண்டு இந்த விடயம் குறித்து வினவலாம் எனத் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க