அமெரிக்காவில் வினோதமான ஒருவர், வெர்ஜீனியா மாநிலத்தில் வசிக்கும் மக்களின் வீட்டு வாசல்களில் பழைய தொலைக்காட்சிகளை விட்டு சென்றுள்ளார்.
இந்த வினோதமான நிகழ்வு அமெரிக்காவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த மனிதர் , அவரின் தலையில் ஒரு டிவியை அணிந்துக்கொண்டு இரவு நேரத்தில் சுமார் 60 பழைய தொலைக்காட்சிகளை அங்கு வசிக்கும் குடிமக்களின் வீட்டு வாசல்களில் விட்டு சென்றது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது.
அந்த வினோதமான நபர் குறித்த எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. இதே போன்று மற்றொரு சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும் நடந்ததாக கூறப்பட்டது.
இந்த வினோதமான நபரை அப்பகுதி மக்கள் “டிவி சாண்டோ கிளாஸ்” என கூறுகின்றனர். இதை குறும்புத்தனமான செயலாக அப்பகுதி மக்கள் கருதுகின்றனர். மேலும், அந்நபர் எந்த விதமான சட்ட மீறுதல்களிலும் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது.
கருத்து தெரிவிக்க