உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

‘நியமனம் வழங்கியும் கடமையைப் பொறுப்பேற்காத பட்டதாரிகள்’

வவு­னியா மாவட்­டத்­தில் பட்­ட­தா­ரி­க­ளுக்கு வழங்­கப்­பட்ட நிய­ம­னத்­தில் 51 பேர் தமது
கட­மை­க­ளைப் பொறுப்­பேற்­க­வில்லை என்று வவு­னியா மாவட்­டச் செய­லர்
தெரி­வித்­துள்­ளார்.
நாடு முழுவதும் 20 ஆயி­ரம் பட்­ட­தா­ரி­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் நிய­ம­னத்­தில் இரண்­டாம் கட்­ட­மாக கடந்த முத­லாம் திகதி 16 ஆயி­ரத்து 800 பேருக்கு நிய­ம­னங்­கள் வழங்­கப்­பட்­டன.
அதில் வவு­னியா மாவட்­டத்­தில் 199 பட்­ட­தா­ரி­க­ளுக்கு நிய­ம­னம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது.
அவர்­க­ளில் 197 பேர் நிய­ம­னக் கடி­தங்­களை பெற்­றி­ருந்­த­னர்.
நிய­ம­னக் கடி­தங்­களை பெற்ற 197 பேரில் தற்­போ­து­வரை 146 பேர் மட்­டுமே கட­மை­க­ளைப் பொறுப்­பேற்­றுள்­ள­னர் என்று மாவட்­டச் செய­லர் தெரி­வித்­தார்.
57 பட்­ட­தா­ரி­கள் தமக்­கான கட­மை­யைப் பொறுப்­பேற்­க­வில்லை. இவர்­கள் ஏற்­க­னவே வேறு கட­மை­க­ளில் இருக்­க­லாம் எனக் கரு­தப்­ப­டுகி­றது.

கருத்து தெரிவிக்க