ஹாங்காங் விமான நிலைய வளாகத்தில் நடைபெற்று வந்த போராட்டம் சற்று தணிந்த நிலையில், விமான சேவை தொடங்கி உள்ளது.
ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக கடந்த 10 வாரங்களாக போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்கள் விக்டோரியா பூங்காவில் அமைதி பேரணி நடத்தினர்.
ஆனால் ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் போலீசாரின் தடையை மீறி அங்கிருந்து வெளியேறி முக்கிய சாலைக்கு சென்றனர்.
இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இதேபோல் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தை முற்றுகையிட்டும் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதன் காரணமாக கடந்த இரண்டு தினங்களாக விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. போராட்டக்காரர்களுக்கும் கலவர தடுப்பு பிரிவு போலீசாருக்குமிடையே மோதல் ஏற்பட்டது.
கருத்து தெரிவிக்க