புதியவைவிளையாட்டு செய்திகள்

இலங்கை – நியுசிலாந்து, முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று

இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டி முற்பகல் 10 மணிக்கு காலியில் இடம்பெறவுள்ளது.

இலங்கையணி திமுத் கருணாரத்தனவின் தலைமையிலும் நியுஸிலாந்து அணி கேன் வில்லியம்சன் தலைமையிலும் களமிறங்கவுள்ளன.

இலங்கை அணியில் தினேஸ் சந்திமால் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

அதேநேரம் நியுஸிலாந்து அணியை பொருத்தமட்டில் இன்றைய போட்டியில் மூன்று சுழல் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க